அறியப்படாத கிறிஸ்தவம்
Rs.9,352.00 Original price was: Rs.9,352.00.Rs.7,000.00Current price is: Rs.7,000.00.

அறியப்படாத கிறிஸ்தவம் part 2
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் கிறித்தவர்கள் வாழ்ந்தாலும் – சாதிக் கட்டுப்பாடு, காலனியக்கால எச்சத்தின் எதிரொலி, சிறுபான்மையினர் என்ற ஆதங்கம், ஆதிக்க சமயத்தினர் கிறித்தவர் மேல்கொண்ட வெறுப்பு, பொருளாதார அளவிலான கொடுமையான ஏழ்மை நிலை போன்றவை அனைத்திற்கும் மத்தியில் – அவர்களை வழிநடத்தும், ஈர்க்கும் சக்தி கிறித்தவம் என அவர்கள் உணர்ந்திருக்கின்றனர். அன்றாட வாழ்வின் துன்ப துயரங்களைச் சந்திக்க எத்தனையோ ஏழைமக்கள் தயாராய் இருக்கின்றனர். இங்குதான் உண்மையில் கிறித்தவ நம்பிக்கை மிளிர்கிறது. அதற்கு இந்த நூல் நன்கு சான்று பகர்கிறது.
இந்நூல் தமிழக கிறித்தவ வரலாற்றைத் தெளிவுபடுத்தும் முறையில் ஒரு முக்கிய பங்களிப்பாய் அமைந்துள்ளது. தமது வரலாறு தெரியாதவர் தம் வாழ்வின் முழு பொருளையும் புரிந்து கொள்ள முடியாது. தன்னை அறிந்து கொள்ளவும் வரலாற்றுப் பார்வை தேவை என்பதும் வரலாற்றுச் சிந்தனையார்கள் முன்வைத்த பாடமாகும். இன்றைய அளவில் சிந்துவெளி நாகரிகம் பற்றியும், கீழடி அகழாய்வு பற்றியும் மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் எழுந்துள்ளதை இங்கு நினைவூட்ட வேண்டும். இந்த ஆய்வுகள் தமிழர் பெருமிதம் கொள்ளவும், தன்னம்பிக்கையை வளர்க்கவும் துணை நிற்கிறது. அதுபோல அறியப்படாச கிறித்தவம் கிறித்தவர் மத்தியில் பெரிய தாக்கத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
- Author : நிவேதிதா லூயிஸ்
- Publisher : கிழக்கு பதிப்பகம்
- No. of Pages : 607 + 662
Additional information
| Weight | 1520 g |
|---|---|
| Dimensions | 21.5 × 13.5 × 3.5 cm |






Reviews
There are no reviews yet.