- You cannot add that amount to the cart — we have 1 in stock and you already have 1 in your cart. View cart
அர்த்தமுள்ள இந்து மதம் பாகம் -5
Rs.120.00
எனக்கு இந்து மத தத்துவங்களில் நீண்டகால ஈடுபாடு உண்டு. நான் நாத்திகனாக இருந்த காலத்தில்கூட, சில தத்துவங்களின் உள்ளர்த்தத்தை வியப்போடு நோக்கியிருக்கிறேன். அவற்றைப் பற்றியெல்லாம் பின்னால் நாம் எழுதப் போகிறோம் என்று கருதியதில்லை. கருதியிருந்தால், இன்னும் பல விஷயங்களைக் குறித்து வைத்திருப்பேன். காஞ்சிப் பெரியவர்களைப் போலவோ, வாரியார் சுவாமிகளைப் போலவோ ஆழமான தத்துவ அறிவு எனக்கில்லை.
அனுபவ ரீதியான உண்மைகளையே பெரும் பாலும் இதில் கூறியிருக்கிறேன். பெரும்பாலும் அனுபவ பூர்வமான உண்மை களை சொல்லுவதே என்னுடைய ஆசை. மற்றக் கட்டுரைகளைப் போலல்லாது, இந்து மதக் கட்டுரைகள் நிம்தியாக உட்கார்ந்து எழுதப்பட வேண்டும். அது மற்றவர்கள் சொல்லாததாகவும் இருக்க வேண்டுமென்றால், எல்லாவற்றை றையும் படிக்கவும் வேண்டும்.
இவ்வளவுதான் வாழ்க்கை என்று, ஒரு பட்டியலைப் போட்டு யாரும் முடித்துவிட முடியாது. யார் எவ்வளவு பெரிய பட்டியல் போட்டாலும் அவர்கள் விட்டுவிட்டதை இன்னொருவர் சுட்டிக்காட்ட முடியும். அதிலும், இந்து மதம் கூறும் லௌகிக வாழ்க்கையை வரிசைப்படுத்தத் தொடங்கும் போது நூற்றுக்கணக்கான பிரிவுகள் , கிளைகள் காட்சியளித்துக் கொண்டேயிருக்கின்றன.
-கவிஞர் கண்ணதாசன்
- Author : கவிஞர் கண்ணதாசன்
- Publisher : கண்ணதாசன் பதிப்பகம்
- No. of Pages : 80
Additional information
| Weight | 59 g |
|---|---|
| Dimensions | 18 × 12 cm |





