காட்டாறு
Rs.750.00
சமூகத்தில் மலிந்துள்ள முரண் பாடுகளும், போலித்தனங்களும், முதலாளி, தொழிலாளி போராட்டங்களும் இந்நாவலில் சிறப்பாக சித்திரிக்கப்பட்டு உணர்ச்சிபூர்வமாக படிப்பவர்களை-அக்காலக் கட்டத்திற்கே அழைத்துச் செல்லும் ஆசிரியரின் எழுத்துவன்மை மிகவும் போற்றுதற்குரியது.
- Author : செங்கை ஆழியான்
- Publisher : கவிதா புத்தகாலயம்
- No. of Pages : 208
Description
செங்கை ஆழியான்’ (கலாநிதி கந்தையா குணராசா) நாடறிந்த நாவலாசிரியர். ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் சிரியர். மூன்று சிறுகதைத் தொகுதிகளையும் அளித்துள்ளார்; சிறந்த ஆய்வாளர். இவர் கல்வி, நிர்வாகம், இலக்கியம் ஆகிய மூன்று துறைகளிலும் ஆழக்கால் பதித்தவர். *இலங்கை சாகித்திய மண்டலப் பரிசினை ஏழு தடவை களுக்கு மேல் சுவீகரித்துக் கொண்டவர். சிங்கள மொழியில் இவரது சிறுகதைத் தொகுதி (இரவு நேரப் பயணிகள்), காட்டாறு நாவல் என்பன வெளி வந்துள்ளன. The Beast ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்! ‘வாடைக்காற்று திரைப்படமாக வெளிவந்துள்ளது. சம காலப் பிரச்சினைகளின் மானிட அவலங்களைத் தன் புனைகதைகளில் பதிவு செய்யும் கலா பூர்வ எழுத்துக்கள், செங்கை ஆழியானுடையவை.
Additional information
| Weight | 220 g |
|---|---|
| Dimensions | 21.5 × 14 cm |





