Site Navigation

லெனின்

Weight 370 g
Dimensions 21.5 × 13.5 × 3 cm
SKU: KB 648

Rs.1,440.00

Out of stock

மார்க்சை தத்துவஞானியாக, பொருளாதாரஞானியாக அறிந்தவர்களும் லெனினைப் புரட்சியாளராக – அதாவது நடைமுறை அரசியல்வாதியாக – மட்டுமே நோக்குகிறார்கள். மெய்யாலும் அவர் அதனினும் விசாலமானவர். அவர் தத்துவ யுத்தம் நடத்தியிருக்கிறார். அவரின் “பொருள் முதல்வாதமும் அனுபவ விமர்சன வாதமும் ” நூல் மிக நுணுக்கமானது. தேர்ந்த பொருளாதார ஞானியும்கூட. குறிப்பாக விவசாயப் பொருளாதாரத்தில் மகா விற்பன்னர். இளவயதிலிருந்தே இலக்கியத்தில் பெரு விருப்பம். மார்க்சைப் போலவே நாவல் பிரியர். டால்ஸ்டாய் பற்றிய அவரின் மதிப்பீடுகள் மட்டுமல்ல, அதிநவீன கலைகள் பற்றிய அவரின் கண்ணோட்டமும் அழகியல் உலகிற்கு நல்ல கொடை. மாதர் விடுதலை பற்றிய அவரின் கருத்தியல் இப்போதும் அவதானிக்கத் தக்கது.

தேசிய இனப்பிரச்சனை பற்றிய அவரின் கண்ணோட்டம் இந்தியா போன்ற நாடுகளுக்கு சித்தாந்த வழிகாட்டியாக இருக்கும் தகுதி படைத்தது. அதன் நடைமுறைச் செயல்பாடு நாட்டிற்கு நாடு வேறுபடலாம். ஆனால், அதன் உள்ளுறையான சமத்துவச் சிந்தனையின் தேவை உணரப்படாத வரை எந்தவொரு நாட்டின் தேசிய இனப் பிரச்சனையும் தீரப்போவதில்லை. இத்தகைய பன்முக ஞானவான் தீரமிக்க புரட்சியாளராகவும் திகழ்ந்தார்.
இந்த முழுச் சித்திரத்தை தமிழ் மக்கள் நெஞ்சில் எழுப்புவதுதான் நூலின் நோக்கம்.
  • Author : அருணன்
  • Publisher : வசந்தம் வெளியீட்டகம்
  • No. of Pages : 536
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 370 g
Dimensions 21.5 × 13.5 × 3 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “லெனின்”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.