ஆக்கப்படுவதே வாழ்கை
Rs.1,550.00
நீங்கள் பயணம் மெற்கொண்ட பாதையை விதி புரட்டிப் போட்டால் என்ன செய்வீர்கள்? நீங்கள் செல்ல விரும்பாத இடத்தில் அது உங்களைத் தூக்கி எறிந்தால் என்ன செய்வீர்கள்? எதிர்த்துப் போராடுவீர்களா? அஞ்சி ஓடுவீர்களா? அடங்கி ஏற்றுக் கொள்வீர்களா?
1980 களின் தொடக்கத்தில் இந்தியாவின் இரு நகரங்களுக்கு ஊடே கதைக் களத்தை அமைத்தக் கொண்ட ‘உன்னால் ஆக்கப்பட்டதே வாழ்க்கை’ என்கிற இந்நூல் அங்கிதாவின் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த சில ஆண்டுகளின் நிகழ்வுகளை உணர்ச்சிப் பெருக்குடன் தொகுத்துத் தருகிறது. அங்கிதா சர்மா காலடியில் இந்த உலகத்தைக் கட்டி வைத்திருக்கிறாள். இளமையானவள். எழில்கொஞ்சும் தோற்றம். திறமைமிக்கவள். ஏகப்பட்ட நண்பர்கள். இவளைக் கண்ட விடலைகள் கிறங்குகின்றனர்.
அத்துடன், அவள் எம்.பி.ஏ. படிப்பிற்காக தலைசிறந்த மேலாண்மையியல் கல்லூரியில் பெருமுயற்சியில் இடம் பெற்றுவிடுகிறாள். ஆறு மாதங்களுக்கப் பிறகு, மனநல மருத்துவமனையில் அவள் ஒரு நோயாளி. உயிருக்கு உயிரான அனைத்தையும் அவளிடமிருந்து வாழ்க்கை கொடுமையாகவும் கொடூரமாகவும் பறித்தக் கொண்டு விட்டது. மீளப் பெறுவதற்கு அவள் போராடியாக வேண்டும். தன்னைத் தானே வளர்த்தெடுத்தல், நம்பிக்கையே ஆற்றல் எனக் கொள்ளல், விதி வீசியெறிந்ததை வெல்ல வல்ல உளஉறுதிப்பாடு, வெல்லற்கரிய உணர்வெழுச்சி அனைத்தையும் உள்ளத்தை உருக்கும் இந்நூல்.
- Author : ப்ரீத்தி ஷெனாய்
- Publisher : Jaico Publication
- No. of Pages : 200






Reviews
There are no reviews yet.