Site Navigation

வாழ நினைப்போம் வாழுவோம்

Weight 180 g
Dimensions 21.5 × 14 cm
SKU: KB 175

Rs.900.00

Out of stock

நமது தேசத்திற்கு எவ்விதமான தேசியக் குணாதிசயம் தேவை என்று மதிப்பீடு செய்து பார்க்க வேண்டும் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு நிலைத்து நிற்கவல்ல வெற்றிப் பாதையில் தேசம் செல்லும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டங்கள், முதலீடுகள், உபாயங்களின் வாயிலாகப் பயணத்தின் கடைசி மைல்கள் தொலைவில் இருக்கும் நமக்கு என்ன தேவை? பலதுறைகளில் இந்தியா பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. தேசம் பொருளாதார வளர்ச்சி பெற்றுவிட்டது என்று சொல்லப்படுவதற்கு முந்தைய தருணத்து நிகழ்வாக அது உள்ளது.

ஆனால் அது மட்டும் போதுமா ? போதாது . நமது குடிமக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு, நாம் இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இந்த புத்தகம் மக்கள் வாழ்வு சிறப்படைவதற்கான ஒரு அறிக்கையாகும். ஒரு தேசத்தை எது உயர்வடைய வைக்கிறது என்பதை அடையாளம் காட்டவும், மற்ற தேசத்து மக்களின் வாழ்க்கை முறையுடன் இந்தியாவை ஒப்பீடு செய்யவும் நான் முயன்றிருக்கிறேன். மாணவர்கள் , ஆசிரியர்கள், விவசாயிகள், குடிமுறைப் பணியாளர்கள், தொழில்முறை மருத்துவப் பணியாளர்கள் போன்றவர்களுக்கான சிறப்பு உறுதிமொழிகளை உருவாக்கியிருக்கிறேன்.

எல்லா மனிதர்களுக்கும் சிறந்த வாழ்க்கை சாத்தியம் என்பதை நிச்சயப்படுத்தும் வகையில் அவை அமைந்துள்ளன. பெற்றாரே இந்த புத்தகத்தைப் படித்து, அந்தச் செய்திகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்துகிறேன். ஆசிரியர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டுத் தங்கள் மாணவர்களுடன் விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அரசியல் தலைவர்கள் இதைப் படித்துவிட்டுப் பாராளுமன்றத்திலும், இந்திய மக்கள் மத்தியிலும் எடுத்துக் கூறவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

– ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்

  • Author : ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்
  • Publisher : கண்ணதாசன் பதிப்பகம்
  • No. of Pages : 174
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 180 g
Dimensions 21.5 × 14 cm
Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.