சிவகாமியின் சபதம்
Rs.5,300.00
மகேந்திர வர்ம பல்லவர், அவருடைய புதல்வர் நரசிம்ம வர்ம பல்லவர் எனும் மாமல்லர் அவர்களுக்கு முந்தைய தலைமுறையால் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்யப்பட்ட மல்லை எனும் மாமல்லபுரத்தின் பின்னணியோடு நான்கு தலைமுறையினரை ஒட்டி பின்னிப் பிணையப்பட்ட அற்புதமான சரித்திரக்கதை ‘சிவகாமியின் சபதம்’.
ஏறக்குறைய 200 க்கும் மேற்பட்ட அத்தியாயங்களும் 4 பாகங்களுமாக உள்ள இப்படைப்பு நூலக பதிப்பாக தரமான கட்டமைப்போடு (Classic Edition) அழகிய முகப்பு வண்ண ஓவியங்களோடு உள் படங்களோடு சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு உங்கள் கரங்களில் தவழ்கிறது.
நாவலில் வரும் சிவகாமி, ஆயனர், பரஞ்சோதி, நாகநந்தி எனும் கதாபாத்திரங்கள் நம் கண்முன்னே வாழும் மனிதர்களைப் படம்பிடித்துக் காட்டுவது போல் சிறப்பான முறையில் புனையப்பட்டுள்ளன, ஆசிரியரின் அற்புதமான எழுத்தாற்றலுக்கு எடுத்துக்காட்டாக இந்நூல் விளங்கு கிறது.
சைவமும் , பௌத்தமும் எப்படியெல்லாம் கொண்டாடப் பட்டது என்பதையும், பரதக்கலையின் மேன்மையும் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளன .
சிவகாமியின் சபதம் அனைவரது இல்ல நூலகங்களையும் அலங்கரிக்க வேண்டிய அற்புதப் படைப்பாகும். வாசகர்கள் படித்து, பாதுகாக்க வேண்டிய சிறந்ததொரு காவியம் என்றால் அது மிகையல்ல.
-கவிதா பப்ளிகேஷன்
- Author : கல்கி
- Publisher : கவிதா வெளியீடு
- No. of Pages : 1056






Reviews
There are no reviews yet.