யோகா
Rs.830.00 Original price was: Rs.830.00.Rs.700.00Current price is: Rs.700.00.
உடலை வளைத்து ஆசனம் செய்வது ஒன்றே யோகா என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு யோகாவின் மற்ற அங்கங்கள் குறித்த ஓர் அறிமுகம் ஏற்பட இந்த நூல் வழிகோலுகிறது. கேள்வி -பதில் வடிவில், யோகா பற்றி மக்களுக்குப் பொதுவாக ஏற்படும் சந்தேகங்களைக் களையும் விதமாகப் பதில்கள் அமைந்துள்ளன,
யோகா பற்றிய தெளிந்த, எளிமையான அறிமுகத்துக்குப் பிறகு. யோகத்தால் விளையும் உடல் நன்மைகள், மனோரீதியான மாற்றங்களையும் பட்டியலிட்டிருக்கிறார் நூலாசிரியர், பலன்களைச் சொன்னால்தானே மக்களை ஈர்க்க முடியும்.
யோகாவால் பயன்பெற்ற சிலரின் உண்மைக் கதைகளையும் சுவைபடக் கூறியுள்ளார். மற்ற உடற்பயிற்சிகளுக்கும் யோகத்துக்கும் மூச்சு என்கிற ஒரு கருவியின் பயன்பாடே முக்கிய வேறுபாடு என்று கூறுவதற்கு முன், யோகாவின் எட்டு அங்கங்களைப் பற்றிய சிறு விளக்கத்தைத் தந்திருக்கிறார்.
சிறுவர். இளைஞர் என வெவ்வேறு வயதினருக்கான பயிற்சி முறை எவ்வாறு மாறுபடும் என்று விளக்கியிருக்கிறார். பயிற்சிப் பகுதியில் ஐந்து விதமான பயிற்சித் தொடர்கள் கொடுத்துப் பயிற்சி செய்யத் தூண்டிய பின்னர், பயனுள்ள எளிதான பல நல்ல ஆசனங்களையும் பிராணாயாமங்களையும் படங்களுடன் விளக்கியுள்ளார்.
அஷ்டாங்க விந்யாசம். ஐயங்கார் யோகா. பிஹார் யோகா முறை போன்ற வேறு சில யோகப் பாணிகளின் முக்கிய நுணுக்கங்களையும் தன்னுடைய யோகா வகுப்புகளில் ஒருங்கிணைக்கிறார்.
யோகா என்னும் கலைக்குள் எளிதாகக் கால் பதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு இந்த நூல் ஒரு சிறந்த நண்பன்.
- Author : ஏயெம்
- Publisher : விகடன் பிரசுரம்
- No. of Pages : 120
or pay only Rs. 233.33 now with






Reviews
There are no reviews yet.