2 ஸ்டேட்ஸ் – என் திருமணத்தின் கதை
Rs.2,300.00 Rs.1,880.00
உலகைச் சுற்றிலும் உள்ள காதல் திருமணங்கள் எளிதானவை: பையன் பெண்ணைக் காதலிக்கிறான். பெண் பையனைக் காதலிக்கிறாள். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள். இந்தியாவில் மேலும் சில படிகள் கடக்கப்பட வேண்டும். பையன் பெண்ணை காதலிக்கிறான். பெண் பையனைக் காதலிக்கிறாள். பெண்ணின் குடும்பம் பையனை விரும்ப வேண்டும். பையனின் குடும்பம் பெண்ணை விரும்ப வேண்டும். பெண்ணின் குடும்பம் பையனின் குடும்பத்தை விரும்ப வேண்டும். பையனின் குடும்பம் பெண்ணின் குடும்பத்தை விரும்ப வேண்டும். பெண்ணும் பையனும் இதற்குப் பிறகும் காதலித்தால் திருமணம் நடை பெறும்.
2 ஸ்டேட்ஸ் இது க்ரிஷ், அனன்யாவின் கதை. இருவரும் இரு வேறு மாநிலத்தைச் சேர்ந்த இந்தியர்கள். மனதாரக் காதலிக்கிறார்கள். திருமணம் செய்ய ஆசைப்படுகிறார்கள் . சொல்லவே வேண்டாம். அவர்கள் பெற்றோர்கள் எதிர்க்கின்றனர். அவர்களுடைய காதல் கதையை, காதல் திருமணமாக மாற்ற பெரும் போராட்டத்தை எதிர் கொள்ள வேண்டும். சண்டையிடுவதும், போராடுவதும் எளிது. சம்மதிக்க வைப்பது கடினம். வெல்வார்களா?
சேதன் பகத் இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். அவரின் பட்டறையிலிருந்து இன்னொரு வைரம் – இந்தியாவில் கலப்பு திருமணங்கள் பற்றிய ஒரு நகைச்சுவை இழையோடும் கதை.
- Author : சேதன் பகத்
- Publisher : Jaico Publication
- No. of Pages : 362
or pay only Rs. 626.67 now with
Reviews
There are no reviews yet.