அலை ஓசை
Rs.5,300.00 Original price was: Rs.5,300.00.Rs.4,550.00Current price is: Rs.4,550.00.

பேராசிரியர் கல்கி அவர்களால் எழுதப்பெற்று ‘கல்கி’ வார இதழில் தொடராக வெளிவந்து பின்னர் நூல்வடிவம் பெற்று, ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற சமூக நாவல் ‘அலை ஓசை’
இந்தியாவின் உயரிய விருதான ‘சாகித்ய அகாதெமி’ பரிசு பெற்ற முதல் தமிழ் நாவல் என்ற பெருமைக்குரியது. 1956 ஆம் ஆண்டு இந்நாவலுக்கு இவ்விருது கிடைத்துள்ளது என்பது நம் தமிழ் நாட்டுக்கே பெருமையாகும்.
இந்த நாவல் வெறும் சமூக நாவல் அல்ல. 1934 ஜனவரியில் பீகார் பூகம்பம் என்ற அதிர்ச்சி அலையுடன் ஆரம்பித்து 1948 ஜனவரி மாதம் மகாத்மா காந்திஜியின் பிராணத் தியாகம் என்ற சோக அலையுடன் நிறைவடைகிறது.
கல்கி தேசியமும், காந்தியமும், விடுதலைப் போராட்டமும், அந்தப் போராட்டத்தின் வெற்றியான சுதந்திரப்பேறும் இந்நாவலின் அடிநாதமாய், ஆதார சுருதியாய் அமைந்துள்ளது என்பது சிறப்பம்சமாகும்.
ஏற்கனவே இந்த நாவலைப் படித்தவர்கள். இப்போது படிப்பவர்கள். இனி படிக்கப் போகிறவர்கள் எல்லாருடனும் சேர்ந்து அமரர் கல்கியின் அழியாப் புகழைப் போற்றுகிறேன்.
-சேது சொக்கலிங்கம் கவிதா பப்ளிகேஷன்
- Author : கல்கி
- Publisher : கவிதா வெளியீடு
- No. of Pages : 960
Reviews
There are no reviews yet.