பிடல் காஸ்ட்ரோ
Rs.1,980.00
பிடல் காஸ்ட்ரோ ஒரு மந்திரச் சொல். பூபாகம் தழுவிய போர்க்குணம் பொருந்திய மானுட பெரும் படைக்கு. செயலூக்கத்திற்கான புதிய வேகத்தை இந்தச் சொல் வழங்கியது. ஒவ்வொரு நாட்டின் தனித்தன்மைக்கு ஏற்றவாறு புரட்சிகள் நடந்தேறியுள்ளன. சில புரட்சிகள் வெற்றிபெற்றன. சில தோல்வியைத் தழுவின. இன்னமும் பல நாடுகளில் மாற்றத்திற் கான முன் தயாரிப்பு அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் சரிபாதிக்குப் பின் நடைபெற்ற மாற்றங்கள் – அது ஆயுதம் தாங்கிய போராட்ட மாக இருந்தாலும் சரி, ஆயுதம் தாங்காப் போராட்டமாக இருந்தாலும் சரி, பிடல் காஸ்ட்ரோவின் பெயர் உச்சரிக்கப் படாத மாற்றங்களோ, புரட்சியோ இல்லை என்று உறுதியாகக் கூறலாம். அத்தகைய ஈர்ப்பு அந்தப் பெயரில் பொதிந்து கிடக்கிறது
பிடல் காஸ்ட்ரோவைப் பற்றிய நூலாசிரியரின் பார்வை மிகவும் யோசிக்க தக்கதாகவிருக்கிறது. கிருத்துவமதப் பழமையில் அமிழ்ந்து கிடந்த மக்களைப் புரட்சியை நோக்கி திருப்புவதற்கு எத்தகைய யுக்திகளை காஸ்ட்ரோ கடைப்பிடித்தார்? கம்யூனிச பிரச்சாரங்கள் எதையும் நேரடியாகச் செய்யாமல், முழு கியூபா வையும் எப்படி சோசலிச நாடாக மாற்ற முடிந்தது? ஆகிய வற்றை ஆசிரியர் நம்மை சிந்திக்கத் தூண்டுகிறார்.
- Author : தா.பாண்டியன்
- Publisher : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- No. of Pages : 273






Reviews
There are no reviews yet.