Site Navigation

ஏ.ப.ஜே.அப்துல் கலாம் – ஒரு வாழ்க்கை வரலாறு

Weight 645 g
Dimensions 23 × 15 cm
SKU: KB 174

Rs.2,970.00 Original price was: Rs.2,970.00.Rs.2,525.00Current price is: Rs.2,525.00.

In Stock

விமானத்துறைப் பொறியாளர், விண்வெளி அறிவியலாளர், ஏவுகணை மனிதர், தீர்க்கதரிசி, ஆசிரியர், உத்வேகமூட்டிய மிகச் சிறந்த தலைவர் போன்ற பலவிதமான கௌரவங்களுக்குச் சொந்தக்காரர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள். மகாத்மா காந்திக்குப் பிறகு, அதிக மரியாதைக்குரியவராகக் கருதப்பட்ட ஓர் இந்தியத் தலைவர் அவர் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

ஓர் உன்னதமான வாழ்க்கையை வாழ்ந்த அவர, தன் வாழ்வில் எதிர்ப்பட்ட அனைத்துத் தடைகளையும் சவால்களையும் வெற்றிகரமாகக் கடந்து சென்றார். அதை அவர் நேர்த்தியாகவும் பணிவோடும் சாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Author : ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் | அருண் திவாரி
  • Publisher : Manjul Publications
  • No. of Pages : 548
In Stock

or pay only Rs. 841.67 now with

Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Description

அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை, அவருடைய பண்புநலன்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்த மற்றும் அதற்கு உதவிய அனுபவங்கள் குறித்த ஆழமான புரிதலுடன் அருண் திவாரி எடுத்துரைக்கிறார். அப்துல் கலாம் உருவாக்கிய ஏவுகணைகளைப்போலவே அவருடைய பிரபலத்துவமும் எவ்வாறு விண்ணைத் தொட்டது என்பதை அவருடைய வாழ்க்கைப் போராட்டங்கள் மூலமாக அருண் திவாரி இந்நூலில் விவரிக்கிறார். அப்துல் கலாமின் சீடராகவும் , இணையாசிரியராகவும், அவருடைய சொற்பொழிவுகளை எழுதிக் கொடுத்தவராகவும், நண்பராகவும் முப்பத்து மூன்று வருடங்கள் அவர் அப்துல் கலாமுடன் இருந்த காரணத்தால், கலாமின் ஆளுமை, ஆன்மீகப் பழக்கவழக்கங்கள், அவருடைய அசாதாரணமான சாதனைகளுக்குத் தூண்டுகோலாக இருந்த அவருடைய பேரார்வம் போன்றவற்றை, அதாவது, அப்துல் கலாமின் சாராம்சத்தை, அவரால் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்க முடிந்துள்ளது.

அப்துல் கலாமின் செழிப்பான அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான குட்டிக் கதைகள் வாயிலாகச் சொல்லப்பட்டுள்ள அவருடைய வரலாறு, அவருடைய தாய்நாட்டின் எதிரும் புதிருமான இயல்புகளான, மதம் மற்றும் மதச்சார்பின்மை, புகழ் மற்றும் பணிவு, துடிப்பு மற்றும் அமைதி, அறிவியல் மற்றும் ஆன்மீகம் போன்ற, இந்நாட்டின் பல பெருமைகளையும் முரண்பாடுகளையும் உள்ளடக்கிய ஒரு மனிதராக அவரை வெளிப்படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஓர் இந்தியராக இருந்தார் என்பதை இது வெளிப்படுத்துகிறது.

Additional information

Weight 645 g
Dimensions 23 × 15 cm
Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.