கிருஷ்ணா – கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும்.
Rs.750.00

நெடிய வரலாற்றில், முதன் முதலாக, கிருஷ்ணனின் செய்ய, மனிதன் முயற்சி செய்திருக்கிறான். முதன் முதலாக, கிருஷ்ணன் மூலமாக, மனிதன் தன் சொந்த பலத்தையும், புத்திசாலித்தனத்தையும் சோதித்துப் பார்த்திருக்கிறான். வலிமையான உறவுகளோடு வாழ நேர்ந்தாலும், அதிலிருந்து அந்நியப்பட்டு அதன் பாதிப்பு இல்லாமல், தண்ணீரில் வாழும் தாமரை போல இருக்கமுடியும் என்பதை அவன் சோதித்து அறிந்துவிட்டான். போர்க்களத்திலும் கூட அன்பும், கருணையும் காட்ட முடியும் என்பதை அவன் கண்டுகொண்டான்; கையில் வாள் ஏந்திய நேரத்திலும் முழுமனதோடு அன்பு பொழிய முடியும்.
- Author : ஓஷோ
- Publisher : கண்ணதாசன் பதிப்பகம்
- No. of Pages : 207
Description
கிருஷ்ணன், எதிர்வரும் காலத்திற்கு ஏற்ற மிக முக்கியத்துவமுடையவன் ஆகிறான். அவனுடைய இந்த முக்கியத்துவம் காலப் பெருவழியில் தொடர்ந்து வளர்ந்து கொண்டே செல்லும் மகான்கள், தீர்க்கதரிசிகளின் ஒளியும் பகட்டும் மங்கிக் கொண்டே செல்லும்போது, அடக்கி வைத்தலை வலியுறுத்தும் உலக மதங்கள் குப்பைத்தொட்டியில் வீசப்படும்போது, கிருஷ்ணனின் சுடர் தன் சிகரத்தை நோக்கி உயர்ந்து அதன் சிகரத்தின் உச்சியில் நின்று ஒளிவீசும். முதல் முறையாக, மனிதன் அவனை உணர்ந்து கொள்ளமுடிவதாலும் அவனைப் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ளப்போவதாலும்தான் அப்படி நிகழப் போகிறது. முதல் முறையாக மனிதன் உண்மையாகவே அதற்குத் தகுதியுடையவனாக ஆகப் போவதாலும், அவனது ஆசீர்வாதங்களுக்கு ஏற்றவனாக ஆகப்போவதாலும்தான் அப்படி நிகழப்போகிறது.
Additional information
| Weight | 160 g |
|---|---|
| Dimensions | 18 × 12 cm |





