குண்டலினி யோக ரகசியம்
Rs.1,296.00 Original price was: Rs.1,296.00.Rs.1,100.00Current price is: Rs.1,100.00.
யோகப் பயிற்சியை உடலை மட்டுமே மையமாகக் கொண்டதொரு உடற்பயிற்சியாகச் சித்தர்கள் போற்றவில்லை. இத்தகு உடற்பயிற்சிகளின் வழி மனதை ஒருமுகப்படுத்தி இறுதி இலக்கான இறையின்பத்தைப் பெறவல்ல ஆன்மப் பயிற்சியாகவே இதனைச் சித்தர்கள் பயின்றுள்ளனர்.
உடலில் அக்கினி இருந்தால் மரணம் கிடையாது. உடலில் உள்ள வெப்பம்தான் உயிர் வாழ்க்கைக்கு அடிப்படை. காற்றில் வைத்த தீயைக் காற்று வந்து உசுப்பியதுபோல. பிராணாயாமம் எனும் யோகத் தீயானது குண்டலினியை எழுப்பும். இரவும் பகலும் என்று கூறுவதைப்போல மனிதன் உடலின் இரு பொருளைக் கண்டறிய சூரிய கலை, சந்திர கலை என்பதைக் கண்டறிந்துள்ளனர் சித்தர்கள்.
உயிர் வாழ்வதற்கு மூலமான மூச்சுக்காற்றை ஒவ்வொரு நாளும் பிராணாயாமங்கள் மூலம் நடுநிறுத்த முடியமானால் உடல் இளமை மிகுந்து சுறுசுறுப்பு பெறும்.
வழுவாமல் செய்கின்ற பிராணாயாமங்களால் உடம்பை நெடுநாளாக இளமையோடு காக்கலாம். உடம்பைப் பத்தரைமாற்று பொன்போல முதுமையும் பிணியும் அணுகாமல் காக்கலாம்.
- Author : ஜெகதா
- Publisher : கவிதா பப்ளிகேஷன்
- No. of Pages : 192






Reviews
There are no reviews yet.