குற்றப் பரம்பரை
Rs.3,240.00
“பூர்வீக ரத்த தடயங்கள் மனித குலத்தின் வரலாறுகளை வரலாற்றாசிரியர்கள் மட்டுமே எழுதிவிட முடியாது. மனிதர்களின் முழு வாழ்க்கையை தலைமுறைகளின் வாழ்வை இலக்கியம் மட்டுமே உண்மையாய் பிரதிபலிக்க முடியும். பல ஆண்டுகளுக்கு முன் மார்க்வெசின் ‘ஒரு நூற்றாண்டுத் தனிமையும் மற்ற லத்தீன் அமெரிக்க இலக்கியங்களையும் நான் படித்து பிரமித்திருக்கிறேன்.
வேல.ராமமூர்த்தியின் ‘ குற்றப் பரம்பரை ‘ நாவல் ஒரு நூறாண்டு வாழ்வை நமக்கு உயிரோட்டமாய் உணர்த்துகிறது. கதைக் கரு என்பது வெறுமனே வாழ்விலிருந்து மட்டும் பெறப்படுவதில்லை. வாழ்வியலோடு படைப்பாளியால் பரிசோதிக்கப்பட்டு வாசகனுக்குத் தரப்படுகிற அம்சமாகும். நூறாண்டுகளுக்கு முன்பு இருந்த வாழ்வின் விசயங்களிலிருந்து கதைக் கருவை உருவாக்கி வாசகனுக்குத் தருவது லேசுப்பட்ட விசயமல்ல. அனுபவப்பட்ட மனிதர்களிடமிருந்து தான் கதைக்கரு எடுக்கப்படுகிறது வேல ராமமூர்த்தியின் மனப்பதிவுகள் எனும் சேமிப்பறையில் முரட்டுத்தனமாகவும், இளக்கமாகவும் உருவாக்கப்பட்ட கரு, மறு உருவாக்கம் செய்யும்படி தூண்டியிருக்கிறது. அதன் விளைவே குற்றப்பரம்பரை நாவல்.
எஸ்.எ.பெருமாள்
- Author : வேல ராமமூர்த்தி
- Publisher : டிஸ்கவரி புக் பேலஸ்
- No. of Pages : 448






Reviews
There are no reviews yet.