லெனின் | Lenin
Rs.1,585.00 Rs.1,350.00
ரஷ்யா என்றால் ஜார். ஜார் என்றால் ரஷ்யா.ஆள்கள்தான் மாறுவார்கள். ஆட்சி மாறாது. அடித்தாலும் உதைத்தாலும் அவர்தான். கீழ்ப்படிவதற்கு மட்டுமே ரஷ்யர்களுக்கு உரிமை அளிக்கப்பட்டிருந்தது. இதுதான் வாழ்க்கை. இதுதான் விதி. லெனினின் வருகைக்கு முன்பு வரை எத்தனையோ தேசங்களில் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
ஆனால் ரஷ்யாவில் லெனின் தலைமை யில் நிகழ்த்தப்பட்ட புரட்சிக்கு இணையாக இன்னொன்றை சரித்திரம் இன்றுவரை கண்டதில்லை. காரணம், இது யாரோ ஒரு குழுவினர் அரசுக்கு எதிராக நிகழ்த்திய புரட்சி அல்ல. மக்களே வீதியில் இறங்கி ஒன்று திரண்டு நிகழ்த்திக் காட்டிய புரட்சி. வழி காட்டியவர் லெனின்.
காகிதத்தில் இருந்த கம்யூனிஸ சித்தாந்தத்துக்கு நடைமுறை வடிவம் கொடுத்து, முதல் முதலில் அதனை ஓர் ஆளும் சித்தாந்தமாக மாற்றியவர் லெனின்.
- Author : மருதன்
- Publisher : கிழக்கு பதிப்பகம்
- No. of Pages : 167
or pay only Rs. 450.00 now with
Reviews
There are no reviews yet.