முதல் இடம்
Rs.720.00 Original price was: Rs.720.00.Rs.680.00Current price is: Rs.680.00.
படைப்பின் அற்புதமே அதன் பன்முகம். விதவிதமான நிறங்கள் வடிவங்கள் என்ற கற்பனை ஆவேசமே கடவுள் லீலை. ஒரு பல்லியினத்திலேயே எத்தனை எத்தனை பல்லிகள். மாக்கலர், வெள்ளை, சாம்பல் மற்றும் விதவிதமான புள்ளிகள். ரேகைகள்… புத்தர் போல் ஒரே நிறமான நிர்மலமான பல்லிகள்..
ஆஹா… நல்லியில் டிசைன் இருப்பது நியாயம்… பல்லியில் ஏன் இத்தனை டிசைன்? ஒரே பதில் இயற்கைக்கு இரசனை அதிகம்! வேறுபாடுகளில்தான் அதன் அசாத்தியப் பலம் ஒளிந்திருக்கிறது. பாரதி கூறியது போல் படைப்பு ஒரு வர்ணக் களஞ்சியம்.
– சுகி சிவம்
- Author : சுகி.சிவம்
- Publisher : கவிதா வெளியீடு
- No. of Pages : 216
Description
கடந்த ஒரு நூற்றாண்டின் விஞ்ஞான வளர்ச்சி பல நூற்றாண்டு வளர்ச்சியை விழுங்கிவிட்டது. இனி அதைத் தடுத்து நிறுத்தும் சக்தி உலகில் ஒருவரிடமும் இல்லை. ஆனால் சமீபக் கண்டுபிடிப்புகளான லேசர், மைக்ரோசிப் போலியோ மருந்து. ஹோலோகிராம், கணினி, MRI Scan போன்ற எல்லாமே, தனியார் ஆய்வுக் கூடங்களில்தான் கண்டுபிடிக்கப்பட்டன. அந்தந்த நாட்டு அரசுகளால் ஆய்வுகள் நிகழாமல் போனது வெட்கக்கேடு. கண்டுபிடிப்புகளால் நிறைவது பன்னாட்டு நிறுவனங்களின் பணப்பெட்டி மட்டுமே! எளிய சாதாரண மக்கள் வஞ்சிக்கப் பட்டனர்.
நமது கோபம் விஞ்ஞானத்தின் மீது அல்ல.. விஞ்ஞான வர்த்தக மயத்தின் மீது என்கிற மார்க்ஸியப் பார்வை கவனத்திற்குரியது. வீட்டு வேலைக் கருவிகள் இத்தனை வந்த பின்னும் பெண்களின் வேலை நேரம் ஏன் இன்னும் குறையவில்லை? இதுவும் ஒரு வலுவான கேள்வி.
விஞ்ஞானிகளுக்கு ஒரு வார்த்தை. நீங்கள் கப்பல் செய்யலாம். ஆனால் கடலைச் செய்ய முடியாது. விமானம் செய்யலாம்… ஆனால் ஆகாயம் செய்ய முடியாது. ஐயா! இயற்கை உங்களை விடப் பெரியது. பெரிதினும் பெரிது.
Additional information
| Weight | 190 g |
|---|---|
| Dimensions | 18 × 12.5 cm |






Reviews
There are no reviews yet.