ஆப்கான் வரலாறும் அமெரிக்க வல்லூறும்
Rs.780.00

சு.பொ. அகத்தியலிங்கம் மூத்த ஊடகவியலாளர், எழுத்தாளர், ‘சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள்’, ‘விடுதலைத் தழும்புகள், ‘புரட்சிப் பெருநதி’, ‘சே குவேரா கனல் மணக்கும் வாழ்க்கை ‘உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். தமிழக அரசு விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். தீக்கதிர் பொறுப்பாசிரியராகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் கு உறுப்பினராகவும் செயலாற்றியவர்.
- Author :
- Publisher :
- No. of Pages :
Description
“யுத்தம் – பஞ்சம் நோய் தொழுகை” என்கிற நான்கிற்குள் பந்தாடப்படும் ஆப்கன் மக்களின் அழுகுரல் எப்போது ஓயும்? தன்னைத்தானே ரட்சகனாய் அறிவித்துக்கொண்ட அமெரிக்கா தற்போது ஆப்கன் மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு ஓடுவது ஏன்? இதுவும் அவர்களின் சதித் திட்டத்தின் ஓர் அங்கம்தானா? பெருமளவு இரத்தம் சிந்தாத மாற்றம் என மேற்கத்திய ஊடகங்கள் முழங்குவது ஏன்? இடையில் என்ன நடந்தது? அமெரிக்காவும் திருந்தி நல்ல பிள்ளையாகி விட்டது: தாலிபானும் திருந்தி யோக்கியமாகிவிட்டது என நம்ப முடியுமா? ஆப்கனின் எதிர்காலம் பற்றி ஏதாவது ஆரூடம் சொல்ல முடியுமா? இப்படி எழும் எல்லாக் கேள்விகளுக்கும் விடை அல்ல: விடைகளைத் தேடும் முயற்சியே விரிவாக்கப்பட்ட இப்பதிப்பு.
Additional information
| Weight | 200 g |
|---|





