ராக் fபெல்லர்
Rs.1,036.00 Original price was: Rs.1,036.00.Rs.880.00Current price is: Rs.880.00.

பாராட்டுகளும் விமரிசனங்களும் ராக்ஃபெல்லரின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்தவை. ஆனால் இரண்டையுமே அவர் பெரிதாகப் பொருட்படுத்தியதில்லை. அவருடைய இலக்கு ஒன்றே ஒன்றுதான். வெற்றி. அதுவும் சாதாரண வெற்றியல்ல, பிரும்மாண்டமான வெற்றி. எதிரிகள் அத்தனைபேரையும் அண்ணாந்து பார்க்கச் செய்யும் வகையில் தன்னுடைய வெற்றி இருக்கவேண்டும் என்பார் ராக்ஃபெல்லர். அதைச் சாதிப்பதில்தான் தன் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியையும் பயன்படுத் தினார்.
வர்த்தகத்தில் போட்டி இருக்கவேண்டும் என்று சொன்ன ராக்ஃபெல்லர், அந்தப் போட்டியில் தான் மட்டுமே வெல்லவேண்டும், தன்னுடைய ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனம் மட்டுமே உச்சத்தில் இருக்கவேண்டும் என்பதில் அசாத்திய பிடிவாதம் காட்டினார். அந்த வெற்றியை உறுதிசெய்ய அவர் செய்த சில காரியங்கள் அச்சமூட்டக்கூடியவை. அதன் காரணமாக அவர் சந்தித்த விமரிசனங்கள் அநேகம்.
அரசாங்கம், போட்டியாளர்கள், எதிரிகள் என்று எத்தனை முனைகளில் இருந்து நெருக்கடிகள் வந்தாலும் சரி. கலங்கமாட்டார். கவலைகொள்ளமாட்டார். மாறாக, இரண்டு ஆயுதங்களைப் பயன்படுத்துவார். ஒன்று. நிதானம். மற்றொன்று. துணிச்சல், வாழ்க்கையில் வெற்றிபெறத் துடிக்கும் ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டிய ஆயுதங்கள் இவை.
- Author : கார்த்தீபன்
- Publisher : Sixthsense Publications
- No. of Pages : 152
or pay only Rs. 293.33 now with

Reviews
There are no reviews yet.