தாய்
Rs.3,000.00

மரணத்திறவுகோலைக் கையிலெடுத்துக்கொண்டு இந்த நெஞ்சுரமிக்க தாய் சோவியத் புரட்சிக்கு தன்னை ஆஹீதியாக்கிக் கொண்டு பயணித்த வரலாறு மெய்சிலிர்க்கச் செய்கிறது. முதலாளித்துவ திமிங்கல வேட்டைக்களத்தில், இறந்தும் இறவாமலுமாக மிதந்து கிடந்த தொழிலாளர் வர்க்கத்தினை நிலம் சார்ந்த வர்க்க விழிப்புணர்ச்சியூட்டுவதற்காக, உப்புக்கரைசலிலிருந்து உயிர்த்தெழுந்து கடைசிவரை போரிட்ட பாசமிக்க தாயை மக்சீம் கார்க்கி ஓர் இதிகாசம் போல படைத்திருக்கிறார்.
- Author : மார்க்ஸிம் கார்க்கி
- Publisher : கவிதா வெளியீடு
- No. of Pages : 608
Description
ஒரு இதிகாசத் தாக்கத்தை உருவாக்கும் முயற்சியாய்க் கழுகுகளின் இறகு கொண்டு எழுதப்பட்ட அமரத்துவம் மிக்க புரட்சிகரமான நாவலாக உலகெங்கிலுமுள்ள முற்போக்குச் சிந்தனையாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட நாவல் மக்சீம் கார்க்கியின் ‘தாய்’ நாவல். வாசிப்போரின் ஆன்மாவுக்குள் நுழைந்து ஆங்காரமிட்டு சமுத்திரக்குரல் எழுப்பிய ஒரு புரட்சித்தாயின் வேட்டைத்தவமாக, என்றென்றும் அழியாத காவியமாக கார்க்கி ‘தாய்’ நாவலைப் படைத்துள்ளார்.
அச்சமும் பரபரப்பும் நாவலின் பக்கங்களின் அச்சாணியாக நம்மைக் கடைசி வரையிலும் அலையடித்துக்கொண்டு செல்லும் வாசிப்பு அனுபவத்தை இந்நாவல் நமக்கு ஏற்படுத்துகிறது. அழிவைத்தேடி அழியாத லட்சியப்பயணமாக இந்தத் தாய் சிறுத்தை உலகெங்கும் புரட்சியை வேட்டையாடிய வரலாறு, வாசிப்பவனுக்குள் கூடுவிட்டு கூடு பாயும் வீர வித்தையைக் கற்றுத்தருகிறது. கரிசனமிக்க அந்தத்தாயின் ஓட்டத்தோடு சமுத்திரக் குழந்தையாக ஒவ்வொரு வாசகனும் சாகாப்பயணம் மேற்கொள்ளும் பரவசத்தைத் தருகிறது இந்நாவல்.
Additional information
| Weight | 700 g |
|---|---|
| Dimensions | 21.5 × 14 cm |





