ஆண்ட்ரு கார்னகி
Rs.600.00
எனது லாபத்தில் இருந்து எனக்குச் சம்பளமாக வருடத்திற்கு 50,000 டாலர்கள் மட்டுமே எடுத்துக்கொள்வேன்.. உழைப்பேன்.. லாபத்தை அதிகரிப்பேன் அதைக் கொண்டு நாட்டிற்கு நல்ல தொண்டுகள் செய்வேன், என கூறிய ஒரு மாபெரும் கொடை வள்ளலின் வாழ்க்கை இந்த நூலில்.
- Author :
- Publisher :
- No. of Pages :
or pay only Rs. 200.00 now with
Description
ஸ்காட்லாந்தில் பிறந்து வளர்ந்து, அமெரிக்காவின் சுதந்திர சூழலை விரும்பி, அமெரிக்க வந்த ஒரு சாதனை மனிதனின் வாழ்க்கை வரலாறு இது. 1851 – ஆம் ஆண்டில் இரண்டரை டாலர் வார சம்பளத்தில் தொடங்கியது அவரது வெற்றி வாழ்க்கை, படிப்படியாக உலகின் முதல் இரும்பாலை மகாராஜாவாக உயர்ந்தார். ரயில் பெட்டிகள் தயாரிப்பது, இரும்புப் பாலங்கள் கட்டுவது, தண்டவாளங்கள் செய்து அவற்றை நிறுவுதல் என்று, தான் தொழிலில் உயர்ந்தது மட்டுமல்லாது அமெரிக்காவையும் தொழிலில் முன்னேற்றமடைந்த நாடாக உயர்த்திய பெருமையாளர் ஆவார் ஆனால் எளிமையானவர்கூட. அன்னாரின் சாதனைகளில் சில.. கார்னகி மெலோன் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தது 1885 – ஆம் ஆண்டில் 500,000 டாலர்கள் வழங்கி பிட்ஸ்பர்க் நூலகத்தை சிறப்புற நடத்தியது. இதைப்போல 3000 நூலகங்களை உலக நாடுகள் பலவற்றிலும் நிறுவியது. ஏன் நூலகங்களுக்கு இவ்வளவு முன்னுரிமை? விவரம் நூலில் 1919 – ஆம் ஆண்டில் கார்னகியின் மறைவின் போது. அவர் நேரடியாக வழங்கிய தர்மங்களின் மொத்தத் தொகை 350 கோடி டாலர். இது தவிர தொண்டு நிறுவனங்களுக்கு இவர் வழங்கியது 30 கோடி டாலர்.
இந்நூல் இந்த சாதனை மேதையின் கையால் எழுதப்பெற்ற சுயசரிதை ஆகும்.
Additional information
| Weight | 180 g |
|---|





